NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போனீங்களா? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போனீங்களா? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு
    தீபாவளிக்காக சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

    தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போனீங்களா? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 01, 2024
    06:34 pm

    செய்தி முன்னோட்டம்

    தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தின் மூலம் சென்னையிலிருந்து 5.76 இலட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் தெரிவித்துள்ளார்.

    மேலும், சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் விடுமுறையை முடித்துக் கொண்டு, மீண்டும் சென்னை உள்ளிட்ட பிற ஊர்களுக்கு திரும்புவதற்காகவும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:-

    சிறப்பு பேருந்துகள்

    தமிழகம் முழுவதும் மக்கள் பயணிக்க சிறப்பு பேருந்துகள்

    2024-தீபவாளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும், பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் சிறப்புப் பேருந்துகளை இயக்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, கடந்த 28.10.2024 முதல் 30.10.2024 ஆகிய 3 நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 4,508 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,784 பேருந்துகள் இயக்கப்பட்டு, 5.76 இலட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை

    சென்னைக்கு திரும்ப சிறப்பு பேருந்துகள்

    தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக, 02/11/2024 முதல் 04/11/2024 வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,165 சிறப்புப் பேருந்துகளும், ஏனய பிற முக்கிய ஊர்களிலிருந்து 3,405 பேருந்துகளும் என ஆக மொத்தம் 12,846 பேருந்துகள் இயக்கப்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    எனவே, பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

    2024-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தின் மூலம் சென்னையிலிருந்து 5.76 இலட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
    - அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு. R. மோகன்… pic.twitter.com/XgQmON2zzU

    — ArasuBus (@arasubus) November 1, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தீபாவளி
    பேருந்துகள்
    சிறப்பு பேருந்துகள்
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா

    தீபாவளி

    "நான் கர்பா செய்யும் வீடியோவைப் பார்த்தேன், டீப்ஃபேக்குகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்": பிரதமர் மோடி பிரதமர் மோடி
    இயக்குனர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும் என்ன பிரச்சனை? கார்த்தி
    திரையரங்குக்குள் பட்டாசு வெடிக்க, பாலபிஷேகம் செய்ய வேண்டாம்- சல்மான் கான் பாலிவுட்
    இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் தமிழ் படங்களின் தொகுப்பு நயன்தாரா

    பேருந்துகள்

    கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும்: அமைச்சர் உத்தரவு சென்னை
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ்களுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு  கோயம்பேடு
    வார இறுதியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு  சென்னை
    தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்

    சிறப்பு பேருந்துகள்

    திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருநாள் - 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் திருவண்ணாமலை
    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 640 சிறப்பு பேருந்துகள் இயக்கம் பண்டிகை
    கோவை விழாவை முன்னிட்டு டபுள் டக்கர் பேருந்து சேவை துவக்கம் கோவை

    தமிழ்நாடு செய்தி

    தமிழகத்தில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு கனமழை
    தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு தமிழக அரசு
    கவரைப்பேட்டை ரயில் விபத்து; மீண்டும் தொடங்கியது மீட்பு பணிகள்; விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய நிபுணர் குழு ஆய்வு ரயில்கள்
    அரையாண்டு தேர்வு, விடுமுறை எப்போது? பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025