தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்
செய்தி முன்னோட்டம்
பொதுவாகவே பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பயன்பெற வேண்டி மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
கடந்த ஆயுத பூஜை விடுமுறையின் போதும் சரி, ஓணம் விடுமுறையின் போதும் சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பஸ்களை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக அந்த வார இறுதி 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து மட்டும் 10,500 சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தீபாவளி சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் சிவசங்கர் நாளை மறுநாள் ஆலோசனை #Deepavali | #TNGovt | #SpecialBus | #VelichamTV pic.twitter.com/s4p0NHCfGM
— Velicham TV (@velichamtvtamil) October 17, 2024
ஆலோசனை
சிறப்பு பேருந்துகள் இயக்கம் தடம், எண்ணிக்கை குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆலோசனை
இதுதொடர்பாக வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5.5 லட்சம் மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கான பணிகளை திட்டமிட இருப்பதாகவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய www.tnstc.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும், TNPSC என்ற மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தற்போது தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.