2 நாட்கள் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது: ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் சொந்த ஊர் நோக்கி பயணம் செய்ய துவங்கிவிட்டனர். இதற்காக சிறப்பு ரயில்களும், பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசும் பொதுமக்கள் நலன் கருதி நவம்பர் 1 ஆம் தேதியும் விடுமுறை அறிவித்துள்ளது. 4 நாட்கள் விடுமுறையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கூட்டம் ரயில்வே ஸ்டேஷனில், பஸ் ஸ்டாண்டுகளிலும் அலைமோத துவங்கிவிட்டது. இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, சென்னை ரயில்வே கோட்டம் வரும் அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில், அதாவது இன்றும், நாளையும், பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை விற்காது என அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என அறிவித்துள்ளது.