திருச்செந்தூர் கோயிலில் நாளை சூரசம்ஹாரம்: சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ள தெற்கு ரயில்வே
எதிர்வரும் சஷ்டி விழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று நவம்பர் 6ஆம் தேதி புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு சென்னை தாம்பரத்திலிருந்து புறப்படும் சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில், நவம்பர் 7ஆம் தேதி காலை 8.30 மணிக்கு திருநெல்வேலியை அடையும். அதேபோல், நவம்பர் 7ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 10.15 மணிக்கு திருச்செந்தூர் இருந்து புறப்பட உள்ள சிறப்பு ரயில், நவம்பர் 8ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.
Twitter Post
திருச்செந்தூரில் சூரஸம்ஹர நிகழ்ச்சி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், நாளை (நவம்பர் 7) நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் திருச்செந்தூருக்கு அலைமோதுகின்றனர். இவர்கள் வசதியாகவே தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. சூரஸம்ஹர நிகழ்ச்சியினை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பக்தர்கள் கூட்டத்தினை கட்டுப்படுத்த கடற்கரை மற்றும் திருக்கோயில் வளாகத்தில் காவல் துறையினர் உயர்கோபுரங்கள் மற்றும் கேமராக்கள் உதவியுடன் கண்காணித்து வருகின்றனர். கடற்படையினரும் கடலோரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.