Loading...
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Vasuki
Nov 10, 2026
12:21 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பை சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை புதன்கிழமை (நவம்பர் 11) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்:

பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சாமநாயக்கன்பாளையம் ரோடு, கண்ணார்பாளையம் ரோடு, அங்கலக்குறிச்சி, ஆனைமலை, வி.கே. புதூர், ஒடையகுளம், ஆர்.சி. புரம், குலவன்புதூர், பெரியபோது, எம்.ஜி. புதூர், சி.என். பாளையம், செம்மோடு, எம்.ஜி.ஆர். புதூர், அம்மன் நகர், ஓ.பி.எஸ். நகர், சேத்துமடை, தேவிபட்டினம்.

திருப்பூர் மாவட்டம் (உடுமலைப்பேட்டை கோட்டம்):

கோட்டமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடக்கு, குடிமங்கலம்.

கரூர் மாவட்டம்:

கணியாலம்பட்டி, ஜெகதாபி, பாலப்பட்டி, வில்வமரத்துப்பட்டி, வீரியப்பட்டி, சுண்டுக்குழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவணை வடக்கு, மேலப்பகுதி, சி.புதூர், விராலிப்பட்டி.

தஞ்சாவூர் மாவட்டம்:

மணிமண்டபம், தஞ்சாவூர் டவுன், அருளானந்தா நகர், உரணிபுரம், பின்னையூர்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தர்மபுரி மாவட்டம்:

அரூர், மோப்பிரிப்பட்டி, அக்ரஹாரம், பேத்தூர், சந்தப்பட்டி, அச்சலவாடி, பி.தாதம்பட்டி, சின்னன்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, எல்லப்புடையாம்பட்டி, நதியனூர்.

வேலூர் மாவட்டம்:

கீழ்பள்ளிப்பட்டு, கண்ணமங்கலம், வரகூர் புதூர், அம்மாபாளையம், வல்லம், கீழரசம்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ADVERTISEMENT