
வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிரான 73 மனுக்கள்; இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்த சட்டம் தற்போது நீதிமன்ற பரிசீலனையில் உள்ளது.
இந்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 73 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.
இந்த வக்ஃப் திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து, அது சட்டமாக அமலுக்கு வந்தது.
இதனை எதிர்த்து காங்கிரஸ், AIMIM (ஓவைசி கட்சி), அகில இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#NewsUpdate | வக்ஃப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது#SunNews | #WaqfAct | #SupremeCourt pic.twitter.com/2NJtgDKzkD
— Sun News (@sunnewstamil) April 16, 2025
திமுக
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள திமுக
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் உத்தரவை தொடர்ந்து, திமுக சார்பில் துணை பொதுச்செயலர் ஆ. ராசா இந்தச் சட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுக்களில்,"இந்த திருத்தச் சட்டம் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்கு விரோதமாகவும், பாகுபாடு ஏற்படுத்துவதாகவும் உள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.
இன்று மதியம் 2 மணிக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்குகளின் விசாரணையைத் தொடங்கவுள்ளது.