
எஸ்.ஜெய்சங்கர் உட்பட 11 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு
செய்தி முன்னோட்டம்
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன் உள்ளிட்ட 11 தலைவர்கள் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
திட்டமிட்டபடி மேற்கு வங்கத்தில் 6 இடங்களுக்கும், குஜராத்தில் 3 இடங்களுக்கும், கோவாவில் ஒரு இடத்துக்கும் ஜூலை 24-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறாது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும்.
எனினும், இந்த தொகுதிகளில் போட்டியிடும் தலைவர்களை எதிர்த்து போட்டியிட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பதால், வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஒருவர் மட்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்.
சஜிக்
எஸ்.ஜெய்சங்கர் இரண்டாவது முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்
6 திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களும், ஐந்து பாஜக வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவர்.
மேற்கு வங்க மாநிலங்களவைத் தொகுதி ஒன்றில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரண்டாவது முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்.
இது தவிர, குஜராத்தில் இருந்து பாஜகவை சேர்ந்த பாபுபாய் தேசாய் மற்றும் கேசரிதேவ் சிங் ஜாலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும், மேற்கு வங்கத்தில் இருந்து அனந்த் மகாராஜ் மற்றும் கோவாவில் இருந்து சதானந்த்-ஷெட் தனவாடே ஆகிய பாஜக வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
டெரெக் ஓ பிரையன், சுகேந்து சேகர் ராய், டோலா சென், சாகேத் கோகலே, சமுருல் இஸ்லாம் மற்றும் பிரகாஷ் பாரிக் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் ஆவர்.