'உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல்': மகா கும்பமேளாவில 300 கி.மீ நீளமுத்திற்கு சிக்கி தவித்த வாகனங்கள்
செய்தி முன்னோட்டம்
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு செல்லும் சாலைகள் அனைத்துமே வாகன நிறுத்துமிடங்களாக மாறிய நிலையில் 300 கிலோமீட்டர் வரை நீண்டு செல்லும் வாகனங்களின் கடல் உலகின் நீண்ட போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியது.
உலகின் மிகப்பெரிய மதக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் தங்கள் கார்களில் வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டிராபிக் ஜாமில் சிக்கித்தவித்தனர்.
"உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல்" என்று இணையவாசிகள் அழைத்த இந்த முன்னெப்போதும் இல்லாத நெரிசல், 200-300 கி.மீ வரை நீடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஞாயிற்றுக்கிழமை பிராஜ்ராஜ் நோக்கி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த போக்குவரத்தை போலீசார் நிறுத்தினர்.
இதனால் மக்கள் பல மணி நேரம் சாலைகளில் சிக்கித் தவித்தனர்.
போக்குவரத்து
அண்டை மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்கள், மீண்டும் திருப்பி விடப்பட்டன
மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பிரயாக்ராஜுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், அதிக கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் நிறுத்தப்பட்டதாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.
ம.பி.,யின் அண்டை மாவட்டங்களில் வாகனப் போக்குவரத்தை நிறுத்தி, பாதுகாப்பான தங்குமிடத்தைக் கண்டுபிடிக்குமாறு காவல்துறை மக்களைக் கேட்டுக் கொண்டது.
கட்னி மாவட்டத்தில் உள்ள காவல் வாகனங்கள் திங்கள்கிழமை வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்புகளை வெளியிட்டன.
அதே நேரத்தில் மைஹார் காவல்துறை வாகனங்களை கட்னி மற்றும் ஜபல்பூர் நோக்கி திரும்பி அங்கேயே தங்குமாறு கேட்டுக் கொண்டது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள கட்னி, ஜபல்பூர், மைஹார் மற்றும் ரேவா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கார்கள் மற்றும் லாரிகள் நீண்ட வரிசையில் நிற்பதை சமூக ஊடகங்களில் பல காணொளிகள் காட்டுகின்றன.