
ரீமால் புயல் 26ஆம் தேதி நள்ளிரவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
செய்தி முன்னோட்டம்
வங்கக்கடலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது.
இந்த நிலையில் நேற்று இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
ரீமால் என பெயரிடப்பட்டுள்ள அந்த புயல், நாளை காலை வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக் கடலில் வலுப்பெற வாய்ப்புள்ளது.
அதன் பின்னர் மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து, நாளை மாலைக்குள் தீவிரப் புயலாக வலுவடையும்.
அதன் தொடர்ச்சியாக 26ஆம் தேதி நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையில் கரையை கடக்கும் இந்த புயல்.
embed
ரீமால் புயல்
#BREAKING || மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை மத்திய கிழக்கு வங்கக் கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது வடக்கு நோக்கி நகர்ந்து, நாளை... pic.twitter.com/87TdqJdq6S— Thanthi TV (@ThanthiTV) May 24, 2024