Page Loader
தொடர்ந்து வெளுத்து வாங்கும் மழை; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்டங்கள் லிஸ்ட்
6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது

தொடர்ந்து வெளுத்து வாங்கும் மழை; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்டங்கள் லிஸ்ட்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 29, 2024
07:57 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று, வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக வடக்கு நோக்கு நகர்ந்து வருகிறது. இது புயலாக மாறும் என எதிர்பார்த்த சூழலில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post