தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்: அடுத்த 3 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை
புயல் நிலவரம்: வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் மேலும் தீவிரமடைந்து, வரும் 5ஆம் தேதி அன்று ஆந்திராவின் நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையில் உள்ள கடற்கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு சில தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 3 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மிக அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு
டிசம்பர் 3
அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் டிசம்பர் 4 வட தமிழகத்தின் அநேக பகுதிகளிலும், தென் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மிக அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரி
டிசம்பர் 5
வட தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், தென் தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- திருவள்ளூர், இராணிப்பேட்டை டிசம்பர் 6 வட தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், தென் தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 7 முதல் டிசம்பர் 9 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.