Page Loader
13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை 
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பதிவாகி இருக்கிறது

13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை 

எழுதியவர் Sindhuja SM
Aug 27, 2023
03:58 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஆகஸ்ட் 27 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகஸ்ட் 28 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 2 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

துக்லக்க்வ்ஜேபி

சென்னையின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யலாம்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34- 35 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25- 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.