டாடா தலைமையகம், தாஜ் ஹோட்டலில் தெரு நாய்களுக்கென விஐபி நுழைவு: செல்லப்பிராணிகள் மீது ரத்தன் டாடாவின் அன்பு
மும்பையின் புகழ்பெற்ற தாஜ்மஹால் ஹோட்டலில் வழிதவறிய விலங்குகளுக்கான பிரத்தேயகமான VIP நுழைவு வாயில், அதே போல டாடா குழுமத்தின் தலைமையகத்தில் தெருநாய்களுக்கென ஒரு தங்கும் போன்றவை ரத்தன் டாடாவின் விலங்குகள் மீது கொண்ட பிரியத்தை விளக்கும். விலங்குகள், குறிப்பாக நாய்கள் மீது ரத்தன் டாடாவின் தீவிர மற்றும் அழியாத அன்பின் காரணமாகவே இத்தகைய திட்டங்கள் சாத்தியமாகியது. விலங்கு உரிமைகள் மீது ஆர்வமுள்ள நபராக அறியப்பட்ட டாடா, தன்னுடைய செல்ல பிராணிக்காக லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் ஒரு அரச நிகழ்ச்சியைத் தவிர்த்தார் என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவர் இறக்கும் முன்னர் அவரது கடைசி திட்டமாக 24x7 அவசர சிகிச்சையுடன் கூடிய நாட்டின் முதல் வகையான, அதிநவீன செல்லப்பிராணி மருத்துவமனையை காட்டினார்.
மும்பையில் தொடங்கப்பட்ட விலங்குகள் மருத்துவமனை
ஜூலை 1ஆம் தேதி, ரத்தன் டாடா மும்பையில் டாடா டிரஸ்ட்ஸ் மூலமாக சிறிய விலங்கு மருத்துவமனையைத் தொடங்கினார். இந்த மருத்துவமனை 200 படுக்கைகளுக்கு மேல் கொண்டது மற்றும் செல்லப்பிராணிகளுக்கு மேம்பட்ட மருத்துவ சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிப்ரவரியில், 165 கோடி ரூபாய் மதிப்பிலான செல்லப்பிராணி மருத்துவமனை திட்டத்தை தொடங்குவதாக அறிவித்தபோது, அவர்,"செல்லப்பிராணிகள் எங்கள் குடும்பம், ஒவ்வொரு செல்லப் பெற்றோருக்கும் அவற்றின் வாழ்க்கை முக்கியம். நான் சுற்றிப் பார்த்தபோது நாட்டில் செல்லப்பிராணிகளுக்கான உள்கட்டமைப்பு இல்லாததைக் கண்டேன். இந்தியாவில் உள்ள செல்லப்பிராணிகள், கணிசமான செல்லப்பிராணிகளைக் கொண்ட இவ்வளவு பெரிய நாட்டில், உயிரைக் காப்பாற்றக்கூடிய மற்றும் செல்லப்பிராணிகளின் வாழ்க்கையை சிறப்பாகச் செய்யக்கூடிய வசதியை நம்மால் ஏன் கொண்டிருக்க முடியாது என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது."
நோய்வாய்ப்பட்ட செல்ல நாயை கவனித்துக்கொள்ள அரச விழாவையே புறக்கணித்த ரத்தன் டாடா
பிப்ரவரி 2018 இல் பக்கிங்ஹாம் அரண்மனையில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு இங்கிலாந்தின் அப்போதைய இளவரசர் சார்லஸின் அழைப்பை ரத்தன் டாடா ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பு ரத்தன் டாடாவின் செல்ல நாய் டிட்டோவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்தியா டுடேயிடம் பேசிய ஹிரானந்தனி, டாடா தனது நோய்வாய்ப்பட்ட செல்ல நாயைப் பராமரிப்பதற்காக கடைசி நிமிடத்தில் லண்டன் பயணத்தை ரத்து செய்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். "அவர் தனது செல்ல நாயை மிகவும் கவனித்துக்கொண்டார் மற்றும் லண்டன் பயணத்தை ரத்து செய்தார். அவர் நாயை தனது படுக்கையில் அவருக்கு அருகில் தூங்க வைத்தார்" என்று ஹிராநந்தனி கூறினார்.