Page Loader
நிலத்தகராறில் 8 முறை ட்ராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ
நிலத்தகராறில் 8 முறை ட்ராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

நிலத்தகராறில் 8 முறை ட்ராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

எழுதியவர் Nivetha P
Oct 25, 2023
07:32 pm

செய்தி முன்னோட்டம்

நிலத்தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் ட்ராக்டர் கொண்டு 8 முறை ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை தற்போது ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் என்னும் பகுதியினை சேர்ந்தவர்கள் பகதூர் சிங் மற்றும் அதூர் சிங். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரது குடும்பத்தினர் இடையே, நெடு நாட்களாக சொத்து விவகாரம் குறித்த நிலத்தகராறு ஒன்று இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று(அக்.,25) காலை பகதூர் சிங் தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு அந்த சர்ச்சை மிகுந்த நிலத்திற்கு ட்ராக்ட்டரில் சென்றுள்ளார். இது குறித்து அறிந்த அதுர் சிங்கும் அங்கு தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு சென்றுள்ளார் என்று தெரிகிறது.

கொலை 

4 பேர் கைது - காவல்துறை விசாரணை 

இதனைத்தொடர்ந்து இரண்டு குடும்பத்தினர் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், அவர்கள் ஒருவரையொருவர் கற்களை கொண்டு தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலுக்கிடையே அதூர் சிங்கின் மகன்களுள் ஒருவரான நிர்பத் சிங் கீழே விழுந்துள்ளார். அப்போது அவரது சகோதரர் என்று கூறப்படும் தாமோதரர் சிங், நிர்பத் சிங் மீது ட்ராக்டரை ஏற்றியுள்ளார். தனது மற்ற குடும்ப உறுப்பினர்கள் தடுத்தும் அதனை பொருட்படுத்தாத தாமோதரர், நிர்பத்சிங் மீது 8 முறை டிராக்டரை முன்னும்பின்னும் ஏற்றி இறக்கியுள்ளார். இதில் அந்த இளைஞர் பரிதாபமாக சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இத்தகராறில் 10 பேர் காயமடைந்த நிலையில் தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

பதபதைக்க வைக்கும் கொடூரம்