
சென்னையில் தொடரும் மழை: 3 நாட்களில் தமிழக-ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நெருங்க இருக்கும் சூறாவளி புயல்
செய்தி முன்னோட்டம்
சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் நேற்றும் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக கடலோர தமிழகத்தில், டிசம்பர் 1 முதல் 4 வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பதால், இன்னும் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்.
சென்னை உள்ளிட்ட 6 தமிழக மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை தவிர, செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று மழை இருக்கும்.
ட்ஜ்வ்க்ன்
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை உண்டா?
மழை காரணமாக நேற்று சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் செங்கல்பட்டில் உள்ள 2 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அடையாறு ஆற்றின் கரையோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் 6 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையில், சென்னையில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழை காரணமாக புழல் ஏரி நேற்று முழு கொள்ளளவையும் எட்டியது. இதனால், நேற்று அந்த ஏரியில் இருந்து 389 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.
டஸ்ஜ்க்வ்ன்ல்
தமிழக-ஆந்திரக் கடலோரப் பகுதிகளை கடக்க இருக்கும் சூறாவளி புயல்
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியயது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேலும் தீவிரமடைந்து டிசம்பர் 3-ஆம் தேதி சூறாவளி புயலாக மாறி, அதன்பின் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4-ஆம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திரா கடற்கரையை கடக்கும்.
இதனையடுத்து, கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு டிசம்பர் 2 முதல் 4 வரையிலும், ஆந்திரா மற்றும் ஏனாமிற்கு டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளிலும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா, மாஹே, புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்
#JUSTIN கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் 3-ஆவது நாளாக வெளியேறாமல் தேங்கி நிற்கும் மழைநீர் #ChennaiRains #Waterlogging #Kodambakkam #News18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/Ka5PmRZD7x
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 1, 2023
ட்விட்டர் அஞ்சல்
பாம்பன் கடற்கரைக்கு செல்ல தடை
#JUSTIN பாம்பன் கடற்கரைக்கு செல்ல தடை #Rameswaram #Pamban #Dhanushkodi #News18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/NbcJsPnRQO
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 1, 2023