
சிவப்பு சிக்னலை கவனிக்காமல் சென்றதால் தான் ஆந்திர ரயில் விபத்து ஏற்பட்டது
செய்தி முன்னோட்டம்
ஆந்திர பிரதேசத்தில் நேற்று இரவு ஏற்பட்ட ரயில் விபத்துக்கு ரயில் டிரைவரின் கவனக்குறைவே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிவப்பு சிக்னலை கவனிக்காமல் சென்ற ரயில் டிரைவரின் தவறினால் தான் ஆந்திர ரயில் விபத்து ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள கண்டகபள்ளி என்ற இடத்தில் நேற்று பலாசா பயணிகள் ரயில் மீது ராயகடா பயணிகள் ரயில் மோதியது.
இதனால், குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ராயகட ரயிலின் ஓட்டுநர் சிவப்பு சிக்னலை தவறவிட்டதால் தான் மனித தவறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என்று கிழக்கு கடற்கரை ரயில்வே அதிகாரி ஒருவர் NDTV செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
டொய்வ்க்ஜ்கள்
மீட்பு பணிகள் இன்று மாலைக்குள் நிறைவடையும்
"விபத்திற்கு விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயிலின் ஓட்டுநர் தான் காரணம். அவர் சிக்னலை மீறி பலாசா ரயிலின் பின்புறத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டது. ஆனால், ராயகடா ரயிலின் டிரைவரும் இந்த விபத்தில் உயிரிழந்துவிட்டார்." என்று தலைமை கிழக்கு கடற்கரை ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி பிஸ்வஜித் சாஹு தெறிவித்துள்ளார்.
"விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, அதன் பிறகுதான் பிரச்சனை தெளிவாகத் தெரியும்," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
விபத்து நடந்த இடத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் இன்று மாலைக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக இதுவரை 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 22 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.