
புழல் ஏரியின் தடுப்பு சுவர் சேதம்; கரை உடையும் அபாயம்
செய்தி முன்னோட்டம்
சென்னை குடிநீருக்கு ஆதாரமான ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. சமீபத்தில் பெய்த கனமழையால், ஏரியின் கொள்ளளவு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், புழல் ஏரியின் நீரின் திறந்து விடப்பட்டால், மீண்டும் சென்னை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், புழல் ஏரியின் ஒரு பக்க தடுப்பு சுவர் இன்று அதிகாலை உடைந்தது. அதனை ஒட்டி உள்ள சாலையும் பழுதடைந்து உள்ளதால், ஏரியின் நீர் அதன் வழியே ஊருக்குள் நுழையும் அபாயம் உள்ளது.
இதனை அடுத்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ஆய்வு ஏரியின் பாதுகாப்பு தன்மை குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
புழல் ஏரியை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்
#BREAKING | சென்னை புழல் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ஆய்வு!
— Sun News (@sunnewstamil) December 7, 2023
புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டி கரைகளில் தண்ணீர் வழிந்தோடிய நிலையில் ஏரியின் உறுதித்தன்மை குறித்து அமைச்சர்கள் நேரில் ஆய்வு!
ஏரிக்கு வினாடிக்கு 850 கனஅடி நீர்… pic.twitter.com/zSsvX6i9D2