Page Loader
நாட்டு மக்களுக்கு 2025 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த குடியரசு தலைவர், பிரதமர் மோடி!
புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த தலைவர்கள்

நாட்டு மக்களுக்கு 2025 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த குடியரசு தலைவர், பிரதமர் மோடி!

எழுதியவர் Venkatalakshmi V
Jan 01, 2025
12:16 pm

செய்தி முன்னோட்டம்

2025ஆம் ஆண்டின் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில்,"அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், செழிப்பையும் தரட்டும்! இந்தச் சந்தர்ப்பத்தில், இந்தியாவிற்கும் உலகிற்கும் ஒளிமயமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக இணைந்து பணியாற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை புதுப்பிப்போம்"" என கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பிரதமர் வாழ்த்து

"அனைவருக்கும் புதிய வாய்ப்புகளையும், வெற்றிகளையும், முடிவில்லாத மகிழ்ச்சியையும் தரட்டும்"

வாழ்த்து செய்தியை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்த பிரதமர் மோடி, "இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வாய்ப்புகளையும், வெற்றிகளையும், முடிவில்லாத மகிழ்ச்சியையும் தரட்டும். அற்புதமான ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும்" என வாழ்த்தினார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து செய்தியை பகிர்ந்து கொண்டார். அதில், "புத்தாண்டு புதிய வெற்றிகளுக்கு வித்திடட்டும்! எங்கும் நலமே சூழட்டும்" என குறிப்பிட்டார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post