நாளை (நவம்பர் 27) உங்க ஏரியாவில் மின்தடை இருக்கா? மாவட்ட வாரியான முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை: தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறையிலிருந்து ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை, படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம், பொதியம்பாளையம், செல்லப்பம்பாளையம் பகுதி, வாகராயம்பாளையம்,, நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம்
தஞ்சாவூர்: திருக்கனூர்பட்டி, அற்புதபுரம், கரம்பாயம், ஆலத்தூர், பாப்பநாடு
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திண்டுக்கல்: சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சாணிப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, பூசாரிபட்டி, கோவிலூர், வரதராஜபுரம், குண்டம்பாடி, வடுகம்பாடி, ஆர்.கோம்பை, நெட்டோபட்டி, எரியோடு, பாகநத்தம், மல்வார்பட்டி, தொட்டணம்பட்டி, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்த்தேயன்கோட்டை, கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம் காசிபாளையம், பாளையம், ராமகிரி, கல்லிப்பட்டி, அணியாப்பூர், எம்.கயத்தார், கூடலூர் பகுதி, கருகால் பகுதி, குஜிலியம்பரை.
தேனி: தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம்