புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் மாற்றம்; சிறப்பு படை விசாரணை துவக்கம்
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில், 9வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அப்பகுதி காவல் ஆய்வாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மற்ற காவலர்கள் குறித்து விசாரணை செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். இந்த சூழலில், இந்த வழக்கில், ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்று நேற்று அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு குழு, சிறுமி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை விசாரணை அதிகாரியிடம் பெற்றுக்கொண்டு, இன்று காலை முதல் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கருணாஸ், விவேகானந்தன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
காவல் ஆய்வாளர் மாற்றம்
#BREAKING || "முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் தனசெல்வம் பணியிட மாற்றம்" புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி "காவல் நிலையத்தில் உள்ள மற்ற காவலர்கள் குறித்து விசாரணை செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்" "குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க தனி சிறப்பு... pic.twitter.com/Y4ICSumWWn— Thanthi TV (@ThanthiTV) March 7, 2024 #BREAKING || "முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் தனசெல்வம் பணியிட மாற்றம்" புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி "காவல் நிலையத்தில் உள்ள மற்ற காவலர்கள் குறித்து விசாரணை செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்" "குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க தனி சிறப்பு... pic.twitter.com/Y4ICSumWWn— Thanthi TV (@ThanthiTV) March 7, 2024
சிறப்பு குழு விசாரணை
#BREAKING || புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், சிறப்பு குழு விசாரணையை தொடங்கியது ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைத்து புதுச்சேரி அரசு நேற்று உத்தரவு சிறுமி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொண்டு இன்று காலை... pic.twitter.com/4LOyQABT6g— Thanthi TV (@ThanthiTV) March 7, 2024