LOADING...
தமிழகத்தில் கனமழை காரணமாக பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழகத்தில் கனமழை காரணமாக பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழகத்தில் கனமழை காரணமாக பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 14, 2023
11:52 am

செய்தி முன்னோட்டம்

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாகை, அரியலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். இந்த நிலையில், தொடர்மழை காரணமாக இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் மறுதேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறுதேர்வு குறித்த அப்டேட்களை http://dte.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

ட்விட்டர் அஞ்சல்

பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு