அரசுத் தலைவராக 25 ஆண்டுகள் நிறைவு: புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி உரை
செய்தி முன்னோட்டம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசுத் தலைவராக தனது 25 ஆண்டுகள் தடையற்ற சேவையை நிறைவு செய்துள்ளார். இந்த மைல்கல்லை கொண்டாடும் வகையில் புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சேவா ஜோதி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, "2001 அக்டோபர் 7 அன்று குஜராத் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, இந்த 25 ஆண்டு மைல்கல்லை எட்டுவேன் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. நான் இன்று எந்த நிலையில் இருந்தாலும், அதற்கு லட்சக்கணக்கான இந்திய மக்களின் நம்பிக்கையும் ஆசிகளுமே முழு காரணம்" எனக் கூறி நன்றி தெரிவித்தார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தலைவர்களின் இடைவிடாத ஆதரவிற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
25 years of serving the people... I bow to 140 crore Indians for their trust and look forward to serving the nation with greater commitment in the times to come. https://t.co/rO1LXY9Csm
— Narendra Modi (@narendramodi) October 7, 2026
முழக்கம்
"We Can Do It": புதிய முழக்கம்
2047-க்குள் 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற இலக்கை அடைவதையே முதன்மையாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, "We Can Do It" என்ற புதிய முழக்கத்தை நாட்டிற்கு வழங்கினார்.
சுயசார்பு பாரதம், சர்வதேச உற்பத்தி மையம், ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது மற்றும் விண்வெளித் திட்டங்கள் என இந்தியாவின் ஆற்றலும் தன்னம்பிக்கையும் வியக்கத்தக்க வகையில் வளர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று தொடங்கிய மாத கால 'சேவா சங்கல்ப் அபியான்'பரப்புரையின் ஒரு பகுதியாக இக்கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
இதன் கீழ் இரத்த தான முகாம்கள், தூய்மைப் பணிகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் மோடியின் 25 ஆண்டு அரசியல் பயணத்தை விளக்கும் ஜோதி பேரணிகள் மற்றும் கண்காட்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.