பூட்டானின் உயரிய குடிமகன் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிப்பு
பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், பிரதமர் நரேந்திர மோடிக்கு, பூட்டான் நாட்டின் உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் தி ட்ருக் கியால்போ" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார் பிரதமர் மோடி. ஆர்டர் ஆஃப் தி ட்ருக் கியால்போ விருது என்பது பூட்டான் மக்களுக்கும், ராஜ்யத்திற்கும் வாழ்நாள் முழுவதும் சேவை செய்ததற்காக வழங்கப்படுவது. டிசம்பர் 17, 2021 அன்று நடைபெற்ற 114வது தேசிய தின விழாவில் பூட்டான் மன்னர் இந்த விருதை அறிவித்தார். இது நிறுவப்பட்டதிலிருந்து, இந்த மதிப்புமிக்க மரியாதை நான்கு குறிப்பிடத்தக்க நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்தியா மற்றும் 140 கோடி இந்தியர்களின் மரியாதை: பிரதமர் மோடி
விருதை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, "இந்த விருது எனது தனிப்பட்ட சாதனை அல்ல; இது இந்தியா மற்றும் 140 கோடி இந்தியர்களின் பெருமை" என்று கூறினார். மேலும் அவர் பூட்டானுடன் நிற்பதாகவும் உறுதியளித்தார். "உங்கள் இலக்குகளை நிறைவேற்ற, இந்தியா BB-பிராண்ட் பூட்டான் மற்றும் பூட்டான் நம்பிக்கைக்காக உங்களுடன் நிற்கிறது. வரவிருக்கும் ஐந்து ஆண்டுகள் எங்கள் உறவுகளுக்கு ஒரு புதிய ஆற்றலைக் கொடுக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்." "இணைப்பு, உள்கட்டமைப்பு, வர்த்தகம் மற்றும் எரிசக்தி துறைகளில் வழிகளை உருவாக்க நாங்கள் பணியாற்றுவோம்." என மோடி தெரிவித்தார். இந்தியாவின்,'அண்டை நாடு முதல் கொள்கை'யின் ஒரு பகுதியாக, பூட்டானுடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்துவதற்காக இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை பூடான் சென்றடைந்தார்.
பூடானின் உயரிய குடிமகன் விருது
#WATCH | Thimpu: The King of Bhutan confers the Order of the Druk Gyalpo on Prime Minister Narendra Modi. As per ranking and precedence established, the Order of the Druk Gyalpo was instituted as the decoration for lifetime achievement and is the pinnacle of the honour system in... pic.twitter.com/hkszvDdWyd— ANI (@ANI) March 22, 2024