நாடாளுமன்றத்தில் அத்துமீறல் - பாதுகாப்பு பணி சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைப்பு
செய்தி முன்னோட்டம்
பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான கடந்த டிச.,13ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது.
அப்போது மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் பொழுது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் அத்துமீறி 2 நபர்கள் நுழைந்து புகை குண்டுகளை வீசினர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
இந்நிகழ்விற்கு எம்.பி.க்கள் உள்ளிட்ட பலர் தங்கள் கண்டனங்களை தெரிவித்ததோடு, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இதுபோன்ற நிகழ்வு அரங்கேறியது என்று குற்றம்சாட்டினர்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை இதில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துமீறல்
முன்னதாக நாடாளுமன்ற பாதுகாப்பு பணி டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தது
இந்நிலையில், நாடாளுமன்றம் கட்டிட வளாக பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு மத்திய ஆயுத படையான சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகியுள்ளது.
டெல்லியில் இயங்கி வரும் பல்வேறு மத்திய அரசு மற்றும் அமைச்சக கட்டிடங்களின் பாதுகாப்பு பணிகள் சி.ஐ.எஸ்.எப். வசம் தான் உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தினை முழுமையாக ஆய்வு செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது என்று தெரிகிறது.
ஆய்வு மேற்கொள்ளப்படும் பட்சத்தில், சி.ஐ.எஸ்.எப் மற்றும் தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பினை முழுமையாக நிலைநிறுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில் டெல்லி காவல்துறை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.