செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர்
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் தொடங்க இருக்கும் இந்த கூட்டத்தொடர், செப்டம்பர் 19ஆம் தேதி புதிய கட்டிடத்துக்கு மாற்றப்படும்.
செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாடாளுமன்ற செயல்பாடுகள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் இந்த ஆண்டு மே 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் ஐந்து அமர்வுகள் இருக்கும் என்றும் தற்காலிக காலண்டர் குறித்து உறுப்பினர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும் என்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்கள் தெரிவித்துள்ளன.
டவ்ன்
சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயர் மாற்றப்படுமா?
செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷியால் அறிவித்தார்.
பொதுவாக, ஒரு வருடத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் ஆகிய மூன்று நாடாளுமன்ற அமர்வுகள் மட்டுமே நடைபெறும்.
இந்த வருடம் புதிதாக சிறப்பு கூட்டத்தொடர் என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் என்ன விவாதிக்கப்பட உள்ளது என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
இந்தியாவின் பெயர் இந்த கூட்டத்தொடரின் போது மாற்றப்படும் என்று பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
33% பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவும் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.