Page Loader
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே துப்பாக்கி சூட்டை தொடங்கிய பாகிஸ்தான்; இந்தியா பதிலடி
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே துப்பாக்கி சூடு

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே துப்பாக்கி சூட்டை தொடங்கிய பாகிஸ்தான்; இந்தியா பதிலடி

எழுதியவர் Venkatalakshmi V
Apr 25, 2025
08:06 am

செய்தி முன்னோட்டம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, இரவு முழுவதும் பாகிஸ்தான் ராணுவத்தால் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) பல பாகிஸ்தான் நிலைகளில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சமீப காலங்களில் இல்லாத அசாதாரண நிகழ்வு என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த துப்பாக்கி சூட்டில் இந்திய தரப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. "எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்களால் சுட்டது. எங்கள் படையினரும் பதிலடி கொடுத்தனர். மேலும் விவரங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

போர் பதற்றம்

இந்தியா- பாக்., இடையே அதிகரிக்கும் போர் பதற்றம்

சமீபத்தில், பிப்ரவரி மாதம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்களால் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதைத் தொடர்ந்து, இந்தியாவும் பதிலடி கொடுத்தது. யாருக்கும் காயமோ அல்லது பொருள் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. இருப்பினும், இந்த சம்பவம் 26 சுற்றுலாப் பயணிகளின் உயிரைப் பறித்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து வந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத சம்பவம் மற்றும் இன்று ஏவுகணை சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் தன்கட்டுப்பாட்டில் இருக்கும் அரபிக்கடல் பகுதியில் இந்திய விமானங்கள் பறக்கத் தடை பிறப்பித்துள்ளது உள்ளிட்ட பல ராஜதந்திர நடவடிக்கைகளை வெளியிட்டதால் இந்தியாவும், பாகிஸ்தானும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன.