
இந்தியாவுக்கு வருவதற்கு முன் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி வெளியிட்ட வீடியோ
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவா வந்திருக்கிறார்.
பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்தியாவுக்கு வருவதற்கு முன் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், "நான் இன்று இந்தியாவுக்குச் செல்கிறேன். அங்கு நடக்க இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சிலில்(CFM) கலந்து கொள்வதற்கான பாகிஸ்தானின் பிரதிநிதியாக நான் இருப்பேன். பாகிஸ்தானுக்கு SCO எவ்வளவு முக்கியமானது என்பதையும், SCOவை அது எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பதையும் எனது இருப்பு காண்பிக்கும். மற்ற வெளியுறவு அமைச்சர்களுடன் இருதரப்பு உறவு குறித்து பேச நான் ஆவலுடன் உள்ளேன்." என்று அவர் கூறியுள்ளார்.
details
12 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியா வரும் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர்
சுமார் 12 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியா வரும் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ ஆவார். 2011ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் இந்தியா வந்திருந்தார்.
SCO வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் கோவாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் சீனாவின் குயின் கேங்கும் பங்கேற்க இருக்கிறார்.
தனது பயணத்தை இருதரப்பு உறவுகளின் அடிப்படையில் பார்க்கக்கூடாது என்று சர்தாரி முன்பு கூறி இருந்தார்.
"SCO சாசனத்திற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த பயணம் இருதரப்பு உறவுகளுக்கானதாக பார்க்கப்படாமல் SCOவின் சூழலில் பார்க்கப்பட வேண்டும்." என்று பிலாவல் பூட்டோ கடந்த மாதம் கூறி இருந்தார்.