LOADING...
வெப்ப அபாயத்தில் இந்தியாவின் 14 முக்கிய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
வெப்ப அபாயத்தில் இந்தியாவின் 14 முக்கிய நகரங்கள்

வெப்ப அபாயத்தில் இந்தியாவின் 14 முக்கிய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 11, 2026
02:59 pm

செய்தி முன்னோட்டம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வின்படி, உலகின் மிக அதிக வெப்ப அபாயத்தை கொண்டுள்ள டாப் 50 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம் பிடித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 'சஸ்டெய்னபிள் சிட்டீஸ் அண்ட் சொசைட்டி' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், உலகெங்கிலும் உள்ள 205 பெரிய நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. வெறும் வெப்பநிலையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், மக்களின் பாதிப்புத் தன்மை, பசுமைப் பரப்பு மற்றும் ஏழை மக்களின் குளிர்விப்பு வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

வரிசை பட்டியல்

இந்தியாவில் அகமதாபாத் முதலிடம்; உலகளவில் மதுரைக்கு 2-வது இடம்!

இந்த ஆய்வின்படி, அகமதாபாத்: இந்தியப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்த நகரத்தின் வெப்ப வெளிப்பாடு 0.89-ஆக மிக மோசமாக உள்ளது. எனினும், இங்குள்ள 'வெப்பச் செயல் திட்டம் பல உயிர்களைக் காத்து வருவதாக ஆய்வு பாராட்டியுள்ளது. நாக்பூர் & போபால்: நாக்பூர் இரண்டாம் இடத்திலும், மக்களின் வயது மற்றும் வருமானக் காரணியால் போபால் மூன்றாம் இடத்திலும் உள்ளன. மதுரை: உலகிலேயே வெப்ப வெளிப்பாட்டில் ஹோ சி மின் நகரத்திற்கு அடுத்தபடியாக மதுரை உலக அளவில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஈரப்பதத்துடன் கூடிய இங்கிருக்கும் அசதி ஊட்டும் வெப்பம் சர்வதேச அளவில் மிக விதிவிலக்கானதாக குவாண்டிஃபை செய்யப்பட்டுள்ளது. பாட்னா: போதிய பசுமைப் பரப்பு இல்லாததால், அதிக பாதிப்புக்குள்ளாகும் மக்களின் எண்ணிக்கையில் பாட்னா முதலிடத்தில் உள்ளது

மற்ற நகரங்கள்

பெங்களூரு, சென்னை மற்றும் பிற பெருநகரங்களின் நிலை

இந்த ஆய்வில் மிகப்பெரிய ஆச்சரியமாக, இந்தியாவின் 'குளிர்ச்சியான நகரம்' என்று அழைக்கப்படும் பெங்களூரு, அதன் சுருங்கி வரும் பசுமை பரப்பால் மும்பை மற்றும் சென்னையை விட அதிக ஒட்டுமொத்த வெப்ப அபாயத்தை கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹைதராபாத் /லக்னோ- கான்கிரீட் காடுகள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றாக்குறை கான்பூர்- வெளிப்புறங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பாதிப்பு புனே- பசுமையான எல்லைப் பகுதிகள் அழிக்கப்படுதல் கொல்கத்தா- மிக மோசமான வெப்பம் + ஈரப்பதம் சென்னை- கடலோர ஈரப்பதத்தால் 0.79 என்ற அதிக வெப்ப வெளிப்பாடு. எனினும், மக்களிடம் உள்ள எதிர்கொள்ளும் திறன் மற்றும் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக ஒட்டுமொத்த அபாயப் புள்ளியில் (0.64) சற்றுப் பின்தங்கி, தற்காப்புப் பலன்களைக் கொண்டுள்ளது என்று இந்த ஆய்வு விளக்குகிறது.

Advertisement