Page Loader
தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை
தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை

தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை

எழுதியவர் Nivetha P
May 09, 2023
10:48 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட 10க்கும்மேற்பட்ட மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள். பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையினை அடுத்த ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தடைச்செய்யப்பட்ட அமைப்பின் முன்னாள் மண்டலத்தலைவர் முகமது கைசர் வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அதேப்போல் தேனியில் எஸ்டிபிஐ மாவட்ட பொதுப்செயலாளர் சாதிக்அலி வீட்டிலும் சோதனை நடந்தது. சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த தஞ்சையை சேர்ந்த முகமதுஅஸாப் என்பவரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு இந்த சோதனை நடத்தப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post