NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆன்லைன் மோசடி, போதை பொருள் கும்பலிடம் இருந்து தப்பிய சென்னை பெண் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆன்லைன் மோசடி, போதை பொருள் கும்பலிடம் இருந்து தப்பிய சென்னை பெண் 
    அந்த மோசடி கும்பல், போதைப்பொருள் அனுப்புவதற்கு ஆதார் எண் பயன்படுத்தப்பட்டதாக கூறி இவரை தொடர்பு கொண்டுள்ளது

    ஆன்லைன் மோசடி, போதை பொருள் கும்பலிடம் இருந்து தப்பிய சென்னை பெண் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 06, 2024
    02:56 pm

    செய்தி முன்னோட்டம்

    சில தினங்களுக்கு முன்னர் குருகிராமில் வசிக்கும் இருவர், சைபர் மோசடி செய்பவர்களால் கிட்டத்தட்ட ரூ. 2 கோடி இழந்த செய்தி வெளியான நிலையில்,சென்னையைச் சேர்ந்த லாவண்யா மோகன் என்ற மார்க்கெட்டிங் நிபுணர் ஒருவரும், தானும் அதேபோன்றதொரு மோசடி கும்பலிடம் ஏமாற இருந்ததாகவும், சற்று சுதாரித்ததால் தப்பித்ததாகவும் கூறியுள்ளார்.

    அந்த மோசடி கும்பல், தாய்லாந்திற்கு போதைப்பொருள் அனுப்புவதற்கு அவருடைய ஆதார் எண்ணை பயன்படுத்தவிருப்பதாக கூறி இவரை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியாக இதுதொடர்பாக பதிவிட்ட லாவண்யா மோகன், தனது ஐடியைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கூறி, FedExஇன் வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகியைப் போல் ஒரு மோசடி நபர் தன்னிடம் உரையாடியதை விவரித்தார்.

    என்ன நடந்தது?

    ஆள் மாறாட்டம் செய்த மோசடி நபர்கள்

    "இரண்டு வாரங்களுக்கு முன்பு, குர்கானைச் சேர்ந்த ஒருவர் மோசடி செய்பவரிடம் 56 லட்சங்களையும் மற்றொருவர் 1.3 கோடியையும் இழந்ததாகச் செய்தி வந்தது. இன்று எனக்கு அதே அழைப்பு வந்தது".

    "FedEx இன் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி அழைத்து உங்கள் ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறினார். போலி பேக்கேஜ் விவரங்கள், எஃப்ஐஆர் எண் மற்றும் அவர்களின் சொந்த போலி ஊழியர் ஐடி ஆகியவற்றையும் வழங்கினார்". "பின்னர் அழைப்பாளர் அவரை ஒரு சுங்க அதிகாரியுடன் இணைத்து பிரச்சினையை தீர்க்க முன்வந்தார்".

    "மேடம், நீங்கள் புகாரைத் தொடரவில்லை என்றால், உங்கள் ஆதார் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்படும். எனவே இணையக் குற்றப் பிரிவுடன் உங்களை உடனே இணைக்கிறேன்" என்று எச்சரித்ததாக லாவண்யா குறிப்பிட்டார்.

    லாவண்யாவின் பதில்

    சுதாரித்த லாவண்யா

    அந்த மர்ம நபர், உடனடியாக காவல்துறையிடம் தொடர்பு கொண்டு தன்னிடம் பேசியதாகவும், அதனால் உடனே இதை தடுக்க ஒரு புகாரை இப்போதே பதிவு செய்துவிடுங்கள் என தன்னை மீண்டும் மீண்டும் நச்சரித்ததாக கூறுகிறார் லாவண்யா.

    உடனே சுதாரித்த லாவண்யா, இது போன்ற ஒரு சீரியஸான பிரச்சனையில் டெலிவரி சேவை தனிநபரை நேரடியாக தொடர்புகொள்வது சாத்தியமில்லை என்றும், அப்படி ஒரு வேளை ஐடி தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், காவல்துறையினர் நேரில் வந்து தெரிவித்திருப்பார்கள் என உணர்ந்ததாகவும் கூறினார்.

    அதனால்,"எப்படியும், போலீஸிலிருந்து என்னைத் தொடர்புகொண்டு பேசும் வரை நான் காத்திருக்கிறேன்" என கூறி அந்த மோசடி நபரின் கால்-ஐ கட் செய்துவிட்டாராம்.

    embed

    லாவண்யாவின் ட்வீட் 

    "Ma'am, if you don't go ahead with the complaint, your Aadhar will continue to be misused so let me connect you right away with the cyber crime branch" Threatening consequences + urgency = scam.— Lavanya Mohan (@lavsmohan) March 5, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சைபர் கிரைம்
    சென்னை
    போதைப்பொருள்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    சைபர் கிரைம்

    சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்? மன ஆரோக்கியம்
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்
    ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!  தொழில்நுட்பம்
    அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!  தொழில்நுட்பம்

    சென்னை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 10 தங்கம் வெள்ளி விலை
    சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பு  ரயில்கள்
    சட்லெஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளான வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டது சைதை துரைசாமி
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 13 தங்கம் வெள்ளி விலை

    போதைப்பொருள்

    இந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது இந்தியா
    'லியோ' படத்தின் 'நா ரெடி' பாடலால் விஜய்க்கு வந்த சிக்கல்  விஜய்
    போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தை - 18 போலீசார் இடைநீக்கம் தமிழ்நாடு
    'மணிப்பூர் வன்முறைக்கு சீனா உதவுகிறது': முன்னாள் ராணுவத் தலைவர் குற்றச்சாட்டு  மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025