
ஒடிசா அரசாங்கத்தில் தமிழருக்கு முக்கிய பொறுப்பு
செய்தி முன்னோட்டம்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற வி கார்த்திகேய பாண்டியனுக்கு, ஒடிசாவில் அமைச்சருக்கு நிகரான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேய பாண்டியன் விருப்ப ஓய்வு கோரி இருந்த நிலையில், மத்திய அரசு அவரின் ஓய்வுக்கு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் விருப்ப ஓய்வு பெற்ற அடுத்த நாளே அவருக்கு, புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
"மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக கார்த்திகேய பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இது கேபினட் அமைச்சருக்கு இணையான பதவி." என அம்மாநில தலைமைச் செயலாளர் வெளியிட்டு இருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
2nd card
நவீன் பட்நாயக் அறிவுறுத்தலில் பிறப்பு ஓய்வு பெற்ற கார்த்திகேய பாண்டியன்?
ஐஏஎஸ் அதிகாரியான கார்த்திகேய பாண்டியன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவுறுத்தலின் பேரிலேயே விருப்ப ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது.
ஒரிசா அரசாங்கத்திலும், பிஜு ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் நவீனுக்கு அடுத்தபடியாக, அதிக செல்வாக்கு மிக்க நபராக கார்த்திகேய பாண்டியன் வலம் வருவதாக சொல்லப்படுகிறது.
மேலும் இவர் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் பலர் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேய பாண்டியன், கடந்த 2000 ஆண்டு ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார்.
கலஹண்டி மாவட்டத்தில் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டவர், பின்னர் பல மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.
இவர் 2012 ஆம் ஆண்டு முதல் முதல்வர் நவீனின் தனிச்செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.