NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளாவில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது; வடகிழக்கு மாநிலங்களுக்கு பெரும்பாலான பகுதிகளுக்கு மழை பெய்ய வாய்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளாவில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது; வடகிழக்கு மாநிலங்களுக்கு பெரும்பாலான பகுதிகளுக்கு மழை பெய்ய வாய்ப்பு
    பருவ மழை வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு முன்னேறியுள்ளது

    கேரளாவில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது; வடகிழக்கு மாநிலங்களுக்கு பெரும்பாலான பகுதிகளுக்கு மழை பெய்ய வாய்ப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    May 30, 2024
    12:20 pm

    செய்தி முன்னோட்டம்

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்கியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த பருவ மழை வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு முன்னேறியுள்ளது என்றும் IMD அறிவித்துள்ளது.

    முன்னதாக மே 15ஆம் தேதி, வானிலை மையம் கேரளாவில் மே 31ஆம் தேதிக்குள் பருவமழை தொடங்கும் என்று அறிவித்தது நினைவிருக்கக்கூடும்.

    "தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறுவதற்கு சாதகமான சூழ்நிலைகள் தென் அரபிக்கடலின் சில பகுதிகள், மாலத்தீவின் மீதமுள்ள பகுதிகள், கொமோரின், லட்சத்தீவுகள், தென்மேற்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா, வடகிழக்கு வங்காள விரிகுடா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளிலும் தொடர்ந்து முன்னேறி வருகின்றன" என்று வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

    பருவமழை

    முன்கூட்டியே பெய்யத்தொடங்கிய பருவ மழை

    கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மே மாதம் உபரியாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஷ்-ஐ சீர்குலைத்த ரெமல் சூறாவளி, வங்காள விரிகுடாவிற்கு பருவமழை-ஐ இழுத்துச் சென்றது.

    இதன் காரணமாகவே வடகிழக்கில் முன்கூட்டியே பருவமழை பெய்ய தொடங்குவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று வானிலை விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    அருணாச்சல பிரதேசம், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா, மிசோரம், மணிப்பூர் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வழக்கமாக ஜூன் 5ஆம் தேதி பருவமழை தொடங்கும்.

    embed

    கேரளாவில் பருவமழை தொடக்கம்

    #BREAKING | கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது!#SunNews | #KeralaRains | #SouthWestMonsoon | #WeatherUpdate pic.twitter.com/LUa5dscX4q— Sun News (@sunnewstamil) May 30, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    பருவமழை
    மழை

    சமீபத்திய

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு

    கேரளா

    சிங்கப்பூர்: அதிகரித்து வரும் கொரோனா தொற்று, மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தும் அரசு சிங்கப்பூர்
    க்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது பாலியல் வன்கொடுமை
    "கவலை தேவையில்லை": கேரளாவில் பரவி வரும் JN.1 வகை தொற்று குறித்து சுகாதார அமைச்சர் பேச்சு கொரோனா
    138 அடியாக உயர்ந்த பெரியார் அணை நீர்மட்டம் - இடுக்கி மாவட்டத்திற்கு 2ம் கட்ட எச்சரிக்கை  உச்ச நீதிமன்றம்

    பருவமழை

    பருவமழை காலத்தில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்  சுற்றுலா
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  டெல்லி
    அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை  தமிழ்நாடு
    திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மழை

    மழை

    சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை கனமழை
    கனமழை எதிரொலி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை
    கடும் மழையால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு; போக்குவரத்திற்கு தடை மதுரை
    கனமழை காரணமாக நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை  செங்கல்பட்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025