
கேரளாவில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது; வடகிழக்கு மாநிலங்களுக்கு பெரும்பாலான பகுதிகளுக்கு மழை பெய்ய வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்கியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த பருவ மழை வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு முன்னேறியுள்ளது என்றும் IMD அறிவித்துள்ளது.
முன்னதாக மே 15ஆம் தேதி, வானிலை மையம் கேரளாவில் மே 31ஆம் தேதிக்குள் பருவமழை தொடங்கும் என்று அறிவித்தது நினைவிருக்கக்கூடும்.
"தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறுவதற்கு சாதகமான சூழ்நிலைகள் தென் அரபிக்கடலின் சில பகுதிகள், மாலத்தீவின் மீதமுள்ள பகுதிகள், கொமோரின், லட்சத்தீவுகள், தென்மேற்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா, வடகிழக்கு வங்காள விரிகுடா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளிலும் தொடர்ந்து முன்னேறி வருகின்றன" என்று வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
பருவமழை
முன்கூட்டியே பெய்யத்தொடங்கிய பருவ மழை
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மே மாதம் உபரியாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஷ்-ஐ சீர்குலைத்த ரெமல் சூறாவளி, வங்காள விரிகுடாவிற்கு பருவமழை-ஐ இழுத்துச் சென்றது.
இதன் காரணமாகவே வடகிழக்கில் முன்கூட்டியே பருவமழை பெய்ய தொடங்குவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று வானிலை விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அருணாச்சல பிரதேசம், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா, மிசோரம், மணிப்பூர் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வழக்கமாக ஜூன் 5ஆம் தேதி பருவமழை தொடங்கும்.
embed
கேரளாவில் பருவமழை தொடக்கம்
#BREAKING | கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது!#SunNews | #KeralaRains | #SouthWestMonsoon | #WeatherUpdate pic.twitter.com/LUa5dscX4q— Sun News (@sunnewstamil) May 30, 2024