Page Loader
இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - கடந்து வந்த பாதை
இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - கடந்து வந்த பாதை

இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - கடந்து வந்த பாதை

எழுதியவர் Nivetha P
Nov 27, 2023
12:52 pm

செய்தி முன்னோட்டம்

1977ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி பிறந்த உதயநிதி ஸ்டாலின் சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை படித்து முடித்தார். அதன் பின்னர் 2008ல் திரைத்துறையில் நடிகர் விஜய் நடித்த 'குருவி' திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான இவர், 2012ல் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்னும் படம் மூலம் கதாநாயகனாக உருமாறினார். திமுக எதிர்க்கட்சியாக இருந்த நேரத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களில் அவ்வப்போது கலந்துக்கொண்ட இவர், 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 'நட்சத்திர பேச்சாளர்' என்னும் அடிப்படையில் தனது பிரச்சாரத்தினை துவங்கினார்.

பிறந்தநாள் 

2021ல் அமைச்சர் பதவி பெற்றார் உதயநிதி ஸ்டாலின்  

அதன் பின்னர், திமுக இளைஞரணி செயலாளர் பதவி இவருக்கு கொடுக்கப்பட்டது. பின்னர் 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில், பிரச்சாரத்தின் பொழுது 'எய்ம்ஸ் எங்கே?' என ஒரு செங்கலை காண்பித்து பேசியது, அவரை சட்டமன்றம் வரை கொண்டு சென்றது என்று கூறப்படுகிறது. தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்த ஒருசில மாதங்களிலேயே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது.

எதிர்ப்பு 

சனாதன ஒழிப்பு குறித்த சர்ச்சையில் சிக்கிய உதயநிதி ஸ்டாலின் 

அரசியலில் நுழைந்த இவருக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் அதனை சாமர்த்தியமாக எதிர்கொண்ட இவர், அண்மையில் சனாதன தர்மம் ஒழிப்பு குறித்து பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார். எனினும், தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளாமல் உறுதியாக தனக்கு வரும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகிறார். திரைத்துறையில் இருக்கையிலேயே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த இவர், அரசியலில் வந்த பின்னர் மக்களுக்கு ஆற்றிய பல்வேறு நற்பணிகள் அவரை மேலும் பிரபலமடைய செய்தது. நீட் பிஜி தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் பெற்றாலும் மருத்துவப்படிப்பில் சேரலாம் என மத்திய அரசு தெரிவித்ததற்கு முட்டையை தூக்கி காண்பித்து தனது எதிர்ப்பினை தெரிவித்தார்.

வாழ்த்து 

தாய் தந்தையரிடம் வாழ்த்து பெற்றார் உதயநிதி ஸ்டாலின் 

எத்தகைய சூழலிலும் தளராமல், தைரியமாக தனது அரசியல் வாழ்க்கையினை தொடரும் உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று தனது 46வது பிறந்தநாள். இதனையொட்டி அவரது தந்தையும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது தாயார் துர்கா ஆகியோரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். அவருக்கு சால்வை அணிவித்த பெற்றோர் அவருக்கு முத்தமிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ள உதயநிதி, "தனது தாய் தந்தையரிடம் வாழ்த்து பெற்ற மகிழ்வான தருணத்தில் இருந்து இந்நாளை துவங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

மரியாதை 

உதயநிதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள்

மேலும் அறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதுமுள்ள இளைஞரணியினை சேர்ந்தோர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கட்சி கொடிகளை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.