Loading...
மழை பெய்வதால் பள்ளிகளுக்கு விடுமுறை? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய விளக்கம்
பள்ளிகளுக்கு விடுமுறை எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய விளக்கம்

மழை பெய்வதால் பள்ளிகளுக்கு விடுமுறை? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய விளக்கம்

எழுதியவர் Vasuki
Oct 18, 2026
06:49 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து வானிலை ஆய்வு மையம் மற்றும் வானிலை நிபுணர்கள் வழங்கும் தொடர் தகவல்களின் அடிப்படையிலேயே ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மேலும், மழைநீர் தேங்கும் பகுதிகளில் அடைப்புகளைச் சரிசெய்து தண்ணீரை விரைவாக வெளியேற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் ஆய்வு

வடிகால் அடைப்புகள் அகற்றம் மற்றும் கள ஆய்வு

மழை பாதிப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "காவல்துறை குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கும் பிரச்சனை ஏற்பட்டது.

இன்று காலையிலேயே ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு மழைநீர் வடிகிறது என்பதைக் களத்தில் கணக்கெடுத்து ஆய்வு செய்தோம்.

அருகிலுள்ள மார்க்கெட் பகுதிகளில் இருந்து அடித்து வரப்படும் அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் மற்றும் குப்பைகள் வடிகால்களை அடைத்துக் கொள்வதால் நீர் சீராக வடியாமல் தேங்குகிறது.

ஊழியர்கள் மூலமாக இந்த அடைப்புகளை உடனடியாக அப்புறப்படுத்தி, மோட்டார்கள் மூலம் தண்ணீரை விரைவாக வெளியேற்றி வருகிறோம்" என்றார்.

விளக்கம்

அரசியல் செய்யாமல் மக்கள் பணி

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்துப் பேசிய அவர், "அதிகாரப்பூர்வ வானிலை ஆய்வு மையம் மட்டுமின்றி, சுயாதீன வானிலை ஆய்வாளர்களுடனும் தொடர்புகொண்டு நிலவரத்தைக் கேட்டறிந்து வருகிறோம்.

அவர்கள் அளிக்கும் துல்லியமான வானிலை முன்னறிவிப்பின் அடிப்படையிலேயே பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும். பேரிடர் காலங்களில் யாரையும் குறை சொல்வதில் பயனில்லை.

அனைத்து அரசு அதிகாரிகளையும், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் ஒருங்கிணைத்து மக்களுக்கான நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதே முதன்மையான கடமை.

இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல, மக்கள் பணி செய்வதற்கான நேரம்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT