NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - தமிழக ஆளுநர் முதல்வருக்கு உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - தமிழக ஆளுநர் முதல்வருக்கு உத்தரவு 
    அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - தமிழக ஆளுநர் முதல்வருக்கு உத்தரவு

    அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - தமிழக ஆளுநர் முதல்வருக்கு உத்தரவு 

    எழுதியவர் Nivetha P
    Dec 20, 2023
    04:59 pm

    செய்தி முன்னோட்டம்

    தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கடந்த 2006-2011ம்.,ஆண்டுவரை திமுக ஆட்சியிலிருந்த காலகட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அமைச்சர் பொன்முடி.

    கடந்த 2011ம்.,ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இவர் மீதும் இவரது மனைவி மீதும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.75 கோடி அளவில் சொத்து சேர்த்ததாக கூறி வழக்குப்பதிவு செய்தனர்.

    இதன்படி, அவர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கின் தீர்ப்பினை நேற்று(டிச.,20) வழங்கியது.

    அதன்படி, சிறப்பு நீதிமன்றம் அளித்த விடுதலை தீர்ப்பினை ரத்து செய்த உயர்நீதிமன்றம், அவருக்கான தண்டனை குறித்த விவரங்கள் வரும் 21ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது.

    வழக்கு 

    பதவி நீக்க விவகாரம் மேலும் ஓர் மோதலாக மாற வாய்ப்புள்ளது!

    இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை விதிக்கப்படவுள்ளதால் அவரை தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

    ஏற்கனவே தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்கிறார் என்று நீதிமன்றத்தில் தமிழக அரசால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதனிடையே தற்போது இந்த பதவி நீக்க விவகாரம் மேலும் ஓர் மோதலாக மாற வாய்ப்புள்ளது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    இதற்கிடையே, தங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் ஓர் வாய்ப்புள்ளது என்று செய்தியாளர்களிடம் திமுகவின் செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    முதல் அமைச்சர்
    ஆர்.என்.ரவி
    திமுக
    உயர்கல்வித்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    முதல் அமைச்சர்

    துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரின் தனிப்பட்ட விருப்பம்- முதல்வர் ஸ்டாலின் திமுக
    புதுச்சேரி அமைச்சர் நீக்கப்பட்டதற்கு மத்திய அரசு ஒப்புதல் புதுச்சேரி
    மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம்தோறும் ஆய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு தமிழ்நாடு
    ஒடிசா அரசாங்கத்தில் தமிழருக்கு முக்கிய பொறுப்பு ஒடிசா

    ஆர்.என்.ரவி

    குடும்பத்தினருடன் ஊட்டி ரயிலில் பயணம் செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டி
    தமிழ்நாடு அரசுடன் மோதல் - 4 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர்  மு.க ஸ்டாலின்
    சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டைக்கு தடை - ஆளுநர் வருகை  சேலம்
    செந்தில் பாலாஜி விவகாரம் - சட்ட வல்லுநர்களுடன் தமிழக முதல்வர் ஆலோசனை  மின்சார வாரியம்

    திமுக

    'பெண்களை வழிபட வேண்டாம், சமமாக நினைத்தால் போதும்': நாடாளுமன்றத்தில் கனிமொழி பேச்சு  மக்களவை
    'ஒரு சின்னப்பிள்ளையை குறிவைக்கிறார்கள்': உதயநிதிக்கு கமல்ஹாசன் ஆதரவு மக்கள் நீதி மய்யம்
    INDIA கூட்டணி கட்சிகளில் சேர்கிறாரா கமல்ஹாசன்? 2024 தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது திமுக தமிழ்நாடு
    திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நாடாளுமன்றம்

    உயர்கல்வித்துறை

    பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் தமிழ்நாடு
    2023-24 கல்வியாண்டில் கல்லூரிகளில் புதிய மாதிரி பாடத்திட்டம் - அமைச்சர் பொன்முடி  தமிழக அரசு
    அமைச்சர் பொன்முடி மீதான வழக்கினை ஒத்திவைத்த விழுப்புரம் நீதிமன்றம் திமுக
    தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு - பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க இருக்கும் அமைச்சர் பொன்முடி ஆர்.என்.ரவி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025