Loading...
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடமிருந்து விவாகரத்து பெறுவதாக மனைவி டெய்சி மார்டின் உருக்கமான அறிக்கை
ஆதவ் அர்ஜுனாவிடமிருந்து விவாகரத்து பெறுவதாக மனைவி டெய்சி மார்டின் அறிவித்துள்ளார்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடமிருந்து விவாகரத்து பெறுவதாக மனைவி டெய்சி மார்டின் உருக்கமான அறிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 16, 2026
01:53 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனான 14 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டு விவாகரத்து பெறவுள்ளதாக அவரது மனைவி டெய்சி மார்டின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக டெய்சி மார்டின் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், இருவரும் பரஸ்பர புரிதலுடன் தனித்தனிப் பாதைகளில் பயணிக்க முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். டெய்சி மார்டின் தனது அறிக்கையில்,"கடந்த 14 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் இணைந்து பயணித்த நாங்கள், அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்த பல கட்டங்களைக் கடந்து வந்துள்ளோம். நண்பர்களாகவும், வாழ்க்கைத்துணைகளாகவும், பெற்றோர்களாகவும் இணைந்து வாழ்ந்தோம். இன்று, ஆதவ் அர்ஜுனாவும் நானும் ஒரு தம்பதியாக பிரிந்து, தனித்தனிப் பாதைகளில் பயணிக்க முடிவெடுத்துள்ளோம்." எனத்தெரிவித்துள்ளார்.

அறிக்கை

"குழந்தையின் நலனுக்கு முன்னுரிமை"

"இது எங்கள் இருவருக்கும் ஒரு புதிய தொடக்கமாக இருந்தாலும், எங்கள் குழந்தையை இணைந்து வளர்ப்பதிலும், குழந்தையின் மகிழ்ச்சியையும் நலனையும் உறுதி செய்வதிலும் நாங்கள் தொடர்ந்து மிகுந்த முன்னுரிமை அளிப்போம்."

"ஆதவ் அர்ஜுனாவின் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவர் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் அவருக்கு மகிழ்ச்சியும், அமைதியும், வெற்றியும் கிடைக்க மனதார வாழ்த்துகிறேன்."

இறுதியாக, இந்த மாற்றமான காலகட்டத்தில் பொதுமக்களும் ஊடகங்களும் தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளித்து, புரிதலையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு டெய்சி மார்டின் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT