அடுத்த செய்திக் கட்டுரை

டெல்லியில் 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்
எழுதியவர்
Sindhuja SM
Nov 11, 2023
04:56 pm
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் இன்று மாலை 3.36 மணிக்கு 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அது வடக்கு மாவட்டத்தில் பூமிக்கு அடியே 10 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
சில நாட்களுக்கு முன்பு, மேற்கு நேபாளத்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, டெல்லி, தேசிய தலைநகர் பகுதி மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
டெல்லி, நிலநடுக்க மண்டலம் IVஇல் உள்ளது. அதாவது, இந்த மண்டலத்தில் இருக்கும் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
டெல்லியில் நில அதிர்வு- மக்கள் அச்சம்
டெல்லியில் நில அதிர்வு- மக்கள் அச்சம்#Delhi | #Earthquake | #Panic pic.twitter.com/9UvhHHsuyw
— Kumudam Reporter (@ReporterKumudam) November 11, 2023
செய்தி இத்துடன் முடிவடைந்தது