Page Loader
பழிக்கு பழி: கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது இந்தியா
கனேடிய பிரதமரின் குற்றச்சாட்டுகளை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

பழிக்கு பழி: கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது இந்தியா

எழுதியவர் Sindhuja SM
Sep 19, 2023
11:45 am

செய்தி முன்னோட்டம்

காலிஸ்தான் பயங்கரவாதியின் கொலை வழக்கில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம்சாட்டி உள்ள நிலையில், இன்னும் ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு ஒரு கனேடிய தூதரக அதிகாரிக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டின் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் பெரிய அளவில் அதிகரித்திருக்கும் தருணத்தில், இந்தியாவுக்கான கனட தூதர் கேமரூன் மேக்கேயை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று அழைத்து பேசியது. "கனேடிய மண்ணில் ஒரு கனேடிய குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கம் தலையிடுவது நமது இறையாண்மையை மீறுவதாகும். இது சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது" என்று ஜஸ்டின் ட்ரூடோ திங்கள்கிழமை கனட நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

சிகவ்ஞ்

அடுத்த ஐந்து நாட்களுக்குள் கனேடிய தூதரக அதிகாரி வெளியேற வேண்டும் என்ற உத்தரவு

ஆனால், கனேடிய பிரதமரின் குற்றச்சாட்டுகளை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இதற்கிடையில், ஒரு கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "இந்தியாவிற்கான கனேடிய தூதர் இன்று வரவழைக்கப்பட்ட்டார். இந்தியாவில் இருக்கும் ஒரு மூத்த கனேடிய தூதரக அதிகாரியை வெளியேற்றுவதற்கான இந்திய அரசின் முடிவு குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தூதர் அடுத்த ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். எங்கள் உள் விவகாரங்களில் கனேடிய தூதர்களின் தலையீடு மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவது குறித்து இந்திய அரசின் வளர்ந்து வரும் கவலையை இந்த முடிவு பிரதிபலிக்கிறது."