மணிப்பூர் வன்முறை: 2 மாதகாலமாக தொடரும் 'இன்டர்நெட்' தடையை நீக்க உத்தரவு
செய்தி முன்னோட்டம்
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ஃபைபர் ஆப்டிக் இணைப்புகள் வைத்திருப்பவர்களுக்கு இணையத் தடையை நீக்குமாறு மாநில அரசுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் மக்கள்தொகையில் 53% பேர் மெய்த்தே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களை தவிர 33 பழங்குடியின மக்களும் அம்மாநிலத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மெய்த்தே சமூகத்தையும் ST பட்டியலில் சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதை அடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' பேரணியை கடந்த மே 3 ஆம் தேதி நடத்தினர்.
அதை தொடர்ந்து பெரும் கலவரம் அம்மாநிலத்தில் வெடித்தது. இந்த கலவரம் பல நாட்களாகியும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
இப்போது வரை தொடரும் இந்த வன்முறையால் இதுவரை 120க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
டுய்ஜ்க்
போலி தகவல்களைத் தடுப்பதற்காவே இணையத் தடை விதிக்கப்பட்டிருந்தது
கடந்த 24 மணி நேரத்தில் மணிப்பூரின் பிஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களுக்கு இடையேயான எல்லைப் பகுதிகளில் நடந்த வன்முறை சம்பவங்களில், ஒரு போலீஸ்காரர் மற்றும் ஒரு சிறுவன் உட்பட குறைந்தது நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
கலவரம் ஆரம்பித்த மே 3ஆம் தேதியில் இருந்து 144 தடை, இணையத் தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் மணிப்பூரில் அமல்படுத்தப்பட்டிருந்தது.
வன்முறைகளும் போலி தகவல்களும் பரப்பப்படுவதை தடுப்பதற்காவே இணையத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இணையத் தடை விதித்தும் வன்முறைகள் தொடர்வதால், பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், இணையத் தடையை ஓரளவு தளர்த்துமாறு மாநில அரசுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.