மகளிர் குழுக்களின் உதவியை நாடிய மணிப்பூர் முதல்வர்
செய்தி முன்னோட்டம்
மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் ஆகியோர் நேற்று(ஜூன் 27) மீரா பைபி(பெண்கள் குழு) மற்றும் மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழு(COCOMI) ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் இரண்டு தனித்தனி சந்திப்புகளை நடத்தினர்.
ஒரு நாளுக்கு முன், பிரதமர் மோடி தலைமையில் இது குறித்து ஒரு கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது மகளிர் குழுக்களின் உதவியை அரசாங்கம் நாடி இருக்கிறது.
மணிப்பூரில் உள்ள பெண் ஆர்வலர்கள் அரசாங்கத்திற்கு எதிராகவும், இராணுவத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
இந்திய ராணுவமும் மணிப்பூர் பெண்களை கடுமையாக குற்றம்சாட்டி இருந்தது.
சஜிடபி
மணிப்பூரில் நிலவி வரும் பதட்டம் கொஞ்சம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மேலும், மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மணிப்பூர் முதல்வர் அம்மாநிலத்தில் இயங்கி வரும் முக்கியமான பெண்கள் குழுவை நேற்று சந்தித்திருக்கிறார்.
இதனால், மணிப்பூரில் நிலவி வரும் பதட்டம் கொஞ்சம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழுவின்(COCOMI) செய்தித் தொடர்பாளர், "சில குழுக்கள் ஏன் போராட்டம் நடத்துகின்றன என்று எங்கள் பெண் தலைவர்கள் அவர்களிடம் விவரித்தார்கள். போராட்டத்திற்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு படையினர் மீது நம்பிக்கை இல்லை. பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முதல்வர் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து எங்களுக்கு விளக்கம் அளித்தனர்." என்று தெரிவித்துள்ளார்.