
கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு சிலை, மணிமண்டபம்; பூமி பூஜை செய்த சசிகலா
செய்தி முன்னோட்டம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிடித்தமான ஹாலிடே ஸ்பாட், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அமைந்துள்ள கொடநாடு.
தேயிலை தோட்டங்கள் சூழ்ந்துள்ள அந்த அமைதியான இடத்தில ஜெலலிதாவிற்கு சொந்தமான ஒரு எஸ்டேட் உள்ளது.
இந்த எஸ்டேட்டிற்கு ஜெயலலிதா உட்பட, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பங்குதாரர்கள் என கூறப்படுகிறது.
இந்த எஸ்டேட் பங்களாவில், ஜெயலலிதாவிற்கு சிலையும், மணிமண்டபமும் கட்டபோவதாக சசிகலா அறிவித்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை கொடநாடு எஸ்டேட்டிற்கு தன்னுடைய குடும்பத்தாருடன் சசிகலா சென்றார்.
இன்று, மணி மண்டபம் அமைப்பதற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் சசிகலா.
இதற்கிடையே, கொடநாடு கொலைவழக்கில் குற்றவாளிகளை ஜெயலலிதாவே தண்டிப்பார் எனவும் சசிகலா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
embed
கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு சிலை, மணிமண்டபம்
கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் அமைக்க சசிகலா அடிக்கல் நாட்டினார் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் அமைக்க இன்று பூமி பூஜை நடைபெற்றது ஜெயலலிதா சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது#Kodanadu #JayalalithaMemorial #ஜெயலலிதா #Sasikala #மணிமண்டபம் pic.twitter.com/PPRQPQjS5N— Oneindia Tamil (@thatsTamil) January 19, 2024