மதுரை ரயில் தீ விபத்து: குடியரசு அரசு தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
செய்தி முன்னோட்டம்
மதுரை ரயில் நிலையத்தில் இன்று(ஆகஸ்ட்-26) ஒரு ரயில் பெட்டியில் மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3-லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிவித்துள்ளது.
இதற்கிடையில், குடியரசு தலைவர் உள்ளிட்ட பெரும் தலைவர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
"தமிழ்நாட்டின் மதுரை சந்திப்பு அருகே நின்று கொண்டிருந்த ரயிலில் தீவிபத்து ஏற்பட்ட பரிதாபகரமான சம்பவத்தை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்." என்று குடியரசு தலைவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.
திஜு;கிவ்ன்
'ஆழ்ந்த இரங்கல்கள்': உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் ட்வீட்
மேலும், "தமிழகத்தின் மதுரையில் நடந்த பயங்கர ரயில் தீ விபத்து வருத்தம் அளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்..!" என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "லக்னோ - ராமேஸ்வரம் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். காங்கிரஸ் தொண்டர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.