
மக்களே விடுமுறை கழிக்க ஊட்டி, கொடைக்கானல் போக திட்டமா? இதை தெரிந்து கொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
கோடை விடுமுறையை ஒட்டி ஊட்டி, கொடைக்கானலில் அதிகளவு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
கடந்த மாதம், மலை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பாடு பல மணிநேரம் வாகனங்கள் நின்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவின.
இந்த நிலையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு குவியும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த இபாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின் படி, வரும் மே 7 முதல் ஜூன் 30 வரை இந்த இபாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
embed
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ்
#BREAKING | உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு!#SunNews | #Ooty | #Kodaikanal | #MadrasHC pic.twitter.com/bnhOO1JZEc— Sun News (@sunnewstamil) April 29, 2024