Page Loader
ஓம் பிர்லா vs கே.சுரேஷ்: நாடாளுமன்றத்தில் இன்று சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது

ஓம் பிர்லா vs கே.சுரேஷ்: நாடாளுமன்றத்தில் இன்று சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது

எழுதியவர் Venkatalakshmi V
Jun 26, 2024
08:23 am

செய்தி முன்னோட்டம்

நேற்று நாடாளுமன்ற சபாநாயகரை ஒரு மனதாக தேர்வு செய்ய முடியாது போனதால், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இருவரும் தத்தமது சபாநாயகர் வேட்பாளர்களின் பெயர்களை பரிந்துரைத்தனர். அதன் பின்னர் அவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிட தங்களது நியமனத்தை சமர்ப்பித்தனர். இந்த நிலையில் இன்று அவை துவங்கியதும் சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சி சார்பில் தற்போதுள்ள சபாநாயகர் ஓம் பிர்லா போட்டியிடுகிறார். INDIA கூட்டணி சார்பில் கே.சுரேஷ் போட்டியிடுகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர்

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு 

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அக்கட்சியின் எம்பி கேசி வேணுகோபால் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய வேணுகோபால், "ராகுல் காந்தியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப்க்கு கடிதம் எழுதியுள்ளார்; மற்ற நிர்வாகிகள் பின்னர் முடிவு செய்யப்படும்" என்று கூறினார். இதன் மூலம் லோக்சபாவில் முக்கிய பதவியை மீண்டும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் காந்தி குடும்பத்தில் மூன்றாவது நபர் ராகுல் காந்தி ஆவார். அவருக்கு முன், அவரது பெற்றோர், சோனியா மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் இந்த பதவியை வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு

எதிர்க்கட்சியினர் பதவியேற்பு

முன்னதாக நேற்று மக்களவையில் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பலரும் அரசியல் சாசன நகலை கையில் வைத்து பதவியேற்றுக்கொண்டனர். ராகுல் காந்தி பதவியேற்றதும்,"ஜெய் ஹிந்த், ஜெய் சம்விதான்" என்று கூறினார். தெலுங்கானாவின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் ஓவைசி மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற பிறகு, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோஷமிட்டு அவையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளும்கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். மறுபுறம் திமுக எம்பிக்கள் சிலர், 'ஸ்டாலின் வாழ்க, உதயநிதி வாழ்க' என முழக்கமிட்டு பதவிப்பிரமாணம் செய்ததும் விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக தயாநிதி மாறன்,"வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்; வாழ்க உதயநிதி ஸ்டாலின், வேண்டாம் நீட்" என முழக்கமிட்டது வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

அசாதுதீன் ஓவைசி பதவியேற்பு

ட்விட்டர் அஞ்சல்

"வாழ்க உதயநிதி ஸ்டாலின்"