NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சட்டம் பேசுவோம்: திருமண-பலாத்காரத்திற்கு எதிராக இந்தியாவில் சட்டங்கள் இல்லையா?
    சட்டம் பேசுவோம்: திருமண-பலாத்காரத்திற்கு எதிராக இந்தியாவில் சட்டங்கள் இல்லையா?
    இந்தியா

    சட்டம் பேசுவோம்: திருமண-பலாத்காரத்திற்கு எதிராக இந்தியாவில் சட்டங்கள் இல்லையா?

    எழுதியவர் Sindhuja SM
    August 26, 2023 | 07:35 pm 1 நிமிட வாசிப்பு
    சட்டம் பேசுவோம்: திருமண-பலாத்காரத்திற்கு எதிராக இந்தியாவில் சட்டங்கள் இல்லையா?
    இந்தியாவில் திருமண-பலாத்காரம் இன்றுவரை குற்றமாக்கப்படவில்லை.

    சட்டம் பேசுவோம்: கணவன் மனைவியாக இருந்தாலும் ஒருவரது விருப்பத்திற்கு மாறாக அவரை உடலுறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்துவது திருமண-பலாத்காரம் என்று அழைக்கப்படுகிறது. பலாத்காரம் என்பது இந்தியாவில் மிகப்பெரும் குற்றமாகும். புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் குற்றவியல் சட்டங்களின்படி, பலாத்கார குற்றத்திற்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம். ஆனால், இந்தியாவில் திருமண-பலாத்காரம் இன்றுவரை குற்றமாக்கப்படவில்லை. சில நாட்களுக்கு முன், மத்திய அரசு முன்மொழிந்த புதிய குற்றவியல் மசோதாவில் கூட திருமண பலாத்காரத்திற்கு எதிராக எந்த விதியும் அறிமுகப்படுத்தப்படவில்லை. "பதினெட்டு வயதை தாண்டிய தன் மனைவியுடன் ஒரு ஆண் உடலுறவு கொள்வது பலாத்காரம் அல்ல" என்று இந்த புதிய குற்றவியல் மசோதா கூறுகிறது.

    திருமணம் என்ற பெயரில் பலாத்காரம் செய்வதற்கு சட்டம் ஒத்துழைக்கிறதா?

    இதற்கு எதிரான சட்டங்கள் எதுவும் இந்தியாவில் இல்லாததால், திருமணம் என்ற பெயரில் பலாத்காரம் செய்வதற்கு சட்டம் ஒத்துழைப்பதாக சில சமூக ஆர்வலர்கள் பல வருடங்களாக குற்றம் சாட்டி வருகின்றனர். திருமண-பலாத்காரத்திற்கு எதிராக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் பல வழக்குகள் இதுவரை போடப்பட்டுள்ளன. ஆனால், அதற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு, திருமண-பலாத்காரத்திற்கு எதிரான சில மனுக்களை ஏற்றுக்கொள்ள இருப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஆனால், அடுத்தகட்ட நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் பெரும்பாலும் பிரிட்டன் போன்ற பிற நாடுகளை தழுவி எழுதப்பட்டதாகும். அப்படி இருக்கையில், பிரிட்டனில் 1991ஆம் ஆண்டிலேயே திருமண பலாத்காரம் குற்றமாக்கப்பட்டுவிட்டது.

    உலக நாடுகளும் திருமண பலாத்காரத்திற்கு எதிரான சட்டங்களும் 

    1981ஆம் ஆண்திலிருந்தே ஆஸ்திரேலியா திருமண ரீதியான பலாத்காரத்தை குற்றமாக்கும் சட்டங்களை இயற்றத் தொடங்கியது. 1983இல் கனடாவும், 1993இல் தென்னாப்பிரிக்காவும் திருமண பலாத்காரத்தை குற்றமாக்கியது. 2019ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகெங்கிலும் உள்ள சுமார் 150 நாடுகளில் திருமண பலாத்காரம் என்பது குற்றமாகும். அந்த 150 நாடுகளுள் 77 நாடுகளில், குறியிடப்பட்ட சட்டங்கள் மூலம் திருமண பலாத்காரம் குற்றமாக்கப்பட்டது. ஆனால், இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. அமெரிக்காவை போலல்லாமல், கருக்கலைப்பு, ஆயுத கட்டுப்பாடு போன்ற முக்கியமான விஷயங்களில் மிக பலமான சட்டங்களை கொண்ட நாடு இந்தியாவாகும். ஆனால், இந்தியாவில் திருமண பலாத்காரத்தை தடுக்க ஒரு சட்டம் கூட இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

    திருமண-பலாத்காரம் குறித்த மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

    டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த திருமண-பலாத்கார வழக்கின் போது, ஒரு பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது. அந்த பிரமாணப் பத்திரத்தில், திருமண பலாத்காரத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரி இருந்தது. திருமண-பலாத்காரத்திற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டால், அதை ஒரு பெண் தவறாக பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது என்று மத்திய அரசு வாதிட்டது. அதனால், ஆண்களைப் பாதுகாக்கவும், திருமண உறவை பாதுகாக்கவும் இப்படிப்பட்ட சட்டங்கள் இயற்றப்பட கூடாது என்றும் மத்திய அரசு கூறி இருந்தது. எனினும், இந்த விவகாரத்தில் விரிவான விவாதம் தேவை என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

    திருமணமான பெண்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடு

    இந்நிலையில், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த இந்த பிரச்சனை குறித்த பொதுநல வழக்குகளை ஒரு மாதத்திற்கு முன், உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த மேல் முறையீடுகளில் முக்கியமான மூன்று கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.அவை:- 1. திருமண-பலாத்காரத்திற்கு எதிரான சட்டங்கள் இந்தியாவில் இல்லை என்பது திருமணமான பெண்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடு இல்லையா? 2. திருமணமான பெண்களின் விருப்பத்திற்கு எதிராக ஒரு கணவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சட்டம் கூறுகிறது. அப்படியென்றால், ஒரு திருமண பந்தத்தில் ஒரு ஆணுக்கு பெண் சமமானவள் இல்லையா? 3. இப்படி ஒரு சட்டம் இல்லாதது, ஒரு மனைவியின் தனியுரிமை, சுய வெளிப்பாட்டு உரிமை, கண்ணியமான வாழ்க்கைக்கான உரிமை மற்றும் அவரது தனிப்பட்ட சுயாட்சிக்கான உரிமை ஆகியவற்றை மீறுகிறதா இல்லையா?

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சட்டம் பேசுவோம்
    இந்தியா

    சட்டம் பேசுவோம்

    சட்டம் பேசுவோம்: பதின் பருவ உடலுறவை குற்றமற்றதாக்குவது குறித்து விவாதிக்கும் உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    சட்டம் பேசுவோம்: புதிய குற்றவியல் சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்கள் இந்தியா
    சட்டம் பேசுவோம்: ஈவ் டீசிங்கிற்கு எதிரான இந்திய சட்டங்களின் பட்டியல் இந்தியா
    செல்லாத திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இனி பெற்றோர்களின் சொத்துக்களில் உரிமை உண்டு  உச்ச நீதிமன்றம்

    இந்தியா

    தான்சானியா கபடி வீரர்களுக்கு பயிற்சியளிக்க பயிற்சியாளர்களை அனுப்பி வைத்தது இந்தியா கபடி போட்டி
    சந்திரயான் 3: புதிய வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ  சந்திரயான் 3
    இந்தியாவில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு  கொரோனா
    புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை 20% அதிகரித்தது மத்திய அரசு மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023