
திடீரென குறுக்கே வந்த ஸ்கூட்டர்; கேரளா முதல்வர் பினராயி விஜயனின் கார் விபத்தில் சிக்கியது
செய்தி முன்னோட்டம்
கேரளா முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரபூர்வ கார் உட்பட 5 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்திற்கு உள்ளானது.
திங்கட்கிழமை (அக்டோபர் 28) மாலை திருவனந்தபுரம் அருகே உள்ள வாமனபுரம் பகுதியில் சென்றபோது, அவரது கான்வாயில் ஸ்கூட்டர் ஒன்று திடீரென நுழைந்தது.
அட்டிங்கல் செல்லும் சாலையில் இருந்து உள்ளே வந்த ஸ்கூட்டர் மீது மோதுவதை தவிர்க்கும் முயற்சியில், பினராயி விஜயனின் காருக்கு முன்னே சென்ற பைலட் போலீஸ் வாகனம் திடீரென பிரேக் போட்டது.
இதைத் தொடர்ந்து முதல்வர் சென்ற வாகனம் உள்பட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
இதில் முதல்வரின் வாகனத்தில் சிறிது சேதம் ஏற்பட்ட நிலையிலும், முதல்வரின் வாகனம் மீண்டும் பயணத்தைத் தொடங்கியது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ட்விட்டர் அஞ்சல்
கேரளா முதல்வர் வாகனம் விபத்து
#BREAKING | விபத்தில் சிக்கிய கேரள முதலமைச்சரின் வாகனம்!#SunNews | #KeralaCM | #PinarayiVijayan | #Accident pic.twitter.com/mjeoMUA16J
— Sun News (@sunnewstamil) October 28, 2024