NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம்: எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம்: எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்
    போராட்டத்தின் போது உரையாற்றிய அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

    தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம்: எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 08, 2024
    02:32 pm

    செய்தி முன்னோட்டம்

    தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆர்பட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடையவுள்ளது.

    இந்த கூட்டத்தொடரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்தார்.

    இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

    "மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது." என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    நிதி ஒதுக்கீடு 

    போராட்டத்தில் குதித்த தென்மாநில எதிர்க்கட்சிகள்

    முன்னதாக நேற்று, கர்நாடகத்திற்கு அநீதி இழைத்துள்ளதாக மத்திய அரசை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் அரசு, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியது.

    அதனை தொடர்ந்து இன்று, மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இதற்கு தமிழக அரசும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்காக திமுக சார்பில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுள்ளார்.

    மறுபுறம், இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும், வெள்ள நிவாரணம் தராததை கண்டித்தும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக கூட்டணிக் கட்சி எம்.பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    தென் இந்தியா
    டெல்லி
    ஆர்ப்பாட்டம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மத்திய அரசு

    சட்டப்பிரிவு 370 தீர்ப்பு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஜம்மு காஷ்மீருக்கு என்ன எதிர்காலத்தை வழங்கியுள்ளது? ஜம்மு காஷ்மீர்
    குற்றவியல் சட்ட திருத்த மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அமைச்சரவை
    அயோத்தி ராமர் கோயில்- ஆயிரம் ஆண்டுகளுக்கு புணரமைப்பு தேவைப்படாது, 6.5 அளவிலான பூகம்பத்தையும் தாங்கும் உத்தரப்பிரதேசம்
    புதுச்சேரி மற்றும் ஜம்மு&காஷ்மீரில் 33% மகளிர் இடஒதுக்கீடு - மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா நாடாளுமன்றம்

    தென் இந்தியா

    24 மணி நேரத்தில் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய படங்களின் டிரெய்லர் பட்டியல் இதோ! யூடியூப் வியூஸ்
    2022ல் வெளியான மலையாளத் திரைப்படங்களில் 90 சதவீத படங்கள் தோல்வி திரையரங்குகள்
    தென்னிந்தியாவில் அவசியம் தரிசிக்க வேண்டிய 5 கோவில்கள் இதோ!  கோவில்கள்
    தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல்- பகுதி 2! பயண குறிப்புகள்

    டெல்லி

    வெள்ள நிவாரணத் தொகையாக பிரதமரிடம் ₹12,000 கோடி கோரினார் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி
    துணை ஜனாதிபதியை மிமிக்ரி செய்ததற்காக திரிணாமுல் எம்பி மீது போலீசில் புகார் நாடாளுமன்றம்
    "ஹிந்தி தெரியணும்" - நிதீஷ் குமார் பேச்சால் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு திமுக
    நிதீஷ்குமாரின் "ஹிந்தி தேசிய மொழி" பேச்சுக்கு சத்குரு கண்டனம் சத்குரு

    ஆர்ப்பாட்டம்

    கல்வி சான்றிதழ்களைக் கிழித்தெரிந்த ஆப்கான் பேராசிரியர்! உலகம்
    ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள் தமிழ்நாடு
    சமூக அமைதியை கெடுப்பதே பா.ஜ.க.வின் நோக்கம் - 28ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் விசிக
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஆளுநர் மாளிகை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025