கட்சியில் இருந்து விலகினார் கர்நாடக பாஜகவைச் சேர்ந்த லட்சுமண் சவாதி
செய்தி முன்னோட்டம்
அடுத்த மாதம் நடைபெற உள்ள கர்நாடக தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் சேர்க்கப்படாததை அடுத்து பாஜக தலைவர் லட்சுமண் சவாதி இன்று(ஏப் 12) அக்கட்சியில் இருந்து விலகினார்.
பாஜக அரசின் அமைச்சராக இருக்கும் லட்சுமண் சவாதி முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் விசுவாசி ஆவார்.
மேலும், இவர் சக்திவாய்ந்த லிங்காயத் தலைவராக கருதப்படுகிறார்.
இதற்கு முன் நடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலில் இவர் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
கர்நாடக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பாக பாஜக கட்சிக்குள் ஏற்படும் சமீபத்திய பிரச்சனை இதுவாகும்.
details
முதல் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது
இந்த முறை வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்படாதவர்களில் ஒருவரான முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், இது குறித்து பாஜக தலைமையிடம் வாதாட டெல்லி சென்றுள்ளார்.
மற்றொரு மூத்த தலைவரான கே.எஸ்.ஈஸ்வரப்பா, தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாது என்பதை தெரிந்து கொண்ட ஈஸ்வரப்பா, இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
கர்நாடக தேர்தலில் போட்டியிடும் 189 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக நேற்று இரவு வெளியிட்டது.
இந்த பட்டியலில் பல பாஜக எம்எல்ஏகள் நீக்கப்பட்டுள்ளனர்.