NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது
    அமலாக்கத்துறை, இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

    நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 01, 2024
    07:54 am

    செய்தி முன்னோட்டம்

    நிலமோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நேற்று இரவு அமலாக்கத்துறையினரால் ராஞ்சியில் கைது செய்யப்பட்டார்.

    முன்னதாக, கைது பற்றி முன்கூட்டியே அறிந்ததுபோல, நேற்று மாலை ஹேமந்த் சோரன் தனது முதலவர் பதவியை ராஜினாமா செய்வதாக கவர்னருக்கு கடிதம் அனுப்பிய சில மணிநேரத்திலேயே, அவரின் கைது படலம் நடந்தேறியது.

    அமலாக்கத்துறை, இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக புதன்கிழமை மாலை, நில மோசடி தொடர்பாக ஏழு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறையினாரால் விசாரிக்கப்பட்டார் ஹேமந்த் சோரன்.

    ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, ஆளும் கட்சியின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்கண்ட் அமைச்சர் சம்பாய் சோரன், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான கோரிக்கையை ஆளுநரிடம் வழங்கினார்.

    ஊழல் 

    குற்றவழக்கில் கைதாகும் மூன்றாவது ஜார்கண்ட் முதல்வர்

    ஜார்கண்ட் அரசியல் வரலாற்றில் குற்றவழக்கில் கைதாகும் மூன்றாவது முதலமைச்சர் ஹேமந்த் சோரன்.

    முன்னதாக, நிலக்கரி பேர வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினாரால் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டவர் மது கோடா.

    அவர் 2006இல் இருந்து 2008 வரை ஜார்கண்ட் முதல்வராக பதவி வகித்தார்.

    அதேபோல, ஹேமந்த் சோரனின் தந்தையும், ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான சிபு சோரன், அவரது தனிச் செயலர் சசிநாத் ஜாவை கடத்தி, கொலை செய்த வழக்கில், தில்லி நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

    நவம்பர் 15, 2000 அன்று ஜார்கண்ட் உருவானதிலிருந்து, ஆறு முதல்வர்களையும், மூன்று ஜனாதிபதி ஆட்சியையும் கண்டுள்ளது.

    ஒரே ஒரு முதல்வர், பாஜகவின் ரகுபர் தாஸ் மட்டுமே தனது முழு பதவிக் காலத்தை முடித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கைது
    அமலாக்கத்துறை
    அமலாக்க இயக்குநரகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கைது

    விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் குறித்து காவல்துறை விளக்கம்  குண்டர் சட்டம்
    மூளை நரம்பில் ரத்த அடைப்புகள்; செந்தில் பாலாஜிக்கு தொடரும் சிகிச்சை செந்தில் பாலாஜி
    திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் ஆந்திரா
    சென்னையில் இரவில் தனியே செல்லும் பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்சி ஓட்டுநர் கைது சென்னை

    அமலாக்கத்துறை

    திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை  ட்விட்டர்
    லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - அக்.,30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை  செந்தில் பாலாஜி

    அமலாக்க இயக்குநரகம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு  செந்தில் பாலாஜி
    அனில் அம்பானியைத் தொடர்ந்து டீனா அம்பானியும் அமலாக்கத்துறையின் முன் ஆஜர் இந்தியா
    செந்தில் பாலாஜியின் மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனு - 3வது நீதிபதி நியமனம்  செந்தில் பாலாஜி
    அமலாக்கத்துறை தலைவரின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025